Sunday, January 29, 2017

என்னுயிர் தோழி ..,!!

பள்ளிக் காலங்களில்..,
பதிய மிட்டோம்  நம் நட்பை..,!!

கல்லூரி காலங்களில்..,
சில காலம் களவு கொடுத்தோம்..,!!

கால சூழ்நிலையில்..,மீண்டும் ..,
துளிர் விட்டது நம் நட்பு..,!!

கல்யாண காலங்களில்..,மொட்டு ..,
விட்டு மலர வைத்தோம் நட்பை..,!!

புது அறிமுகங்களுக்கு..,
நம்மை புரிய வைத்து .., நாமும் புரிந்து..,!!

ஆலாய் வளர வைத்து..,
ஆலில் சில விழுதுகளாய்..,!!

விரிந்து பரந்து..,
நம் குழந்தைகளுக்கும்..,!!

நம் நட்பை.., எடுத்துக்காட்டாய்..,
புரிய வைத்தோம்..,!!

தோழி..,
நாளை.., நம்..,பேரக்குழந்தைகளுக்கும்..,
தெரியும் நம் நட்பு..,!!

                                         உமா நாராயண்(குமரி உத்ரா)

Tuesday, January 24, 2017

ஹைக்கூ குறும்பாக்கள் - 1


தோல்வியை நேசிக்கிறேன்.,
வெற்றியின் மந்திரத்தை..,
சொல்லி தருவதால்..,!!

பூக்களுக்கும் வியர்க்கிறது.
கை நீட்டி துடைத்தான்..,
ஆதவன்.., பனித்துளிகள்..,!!

தொட்டாற் சிணுங்கியாய்..,
வந்து தொடும்..,
விழி மலர்ந்தால் விலகி போகும்..,
கனவு..,!!

நாங்கள் வீழ்வது ..,
எழுவதற்கு..,நாங்கள்..,
எழுந்து விட்டோம்..,
நீங்கள்..,??  விதைகள்..,!!‍‌‍‌

பாதைகளில்..,
கையேந்தும்  பூக்கள்..,
குழந்தை யாசகர்கள்..,!!

வருடும் காற்று..,
உள்ளே புழுக்கம்..,
சுண்டல் பையன்..,!!

மௌனங்களின்..,
பனிக்குடம் உடைந்து..,
ஓசைகள் உயிர் பெற்றது..,
கொலுசொலி..,!!

எனக்கு உன்னை பிடிக்கும்..,
உனக்கு என்னை பிடிக்குமா..,??
இருந்தும் உன்னை..,
பின் தொடர்ந்து.., நான்
மரணம்..,!!

தோல்வியின்..,
முற்றுபுள்ளி..,
வெற்றி..,!!
   
                         உமாநாராயண்,(குமரி உத்ரா)





Thursday, January 19, 2017

முயற்சி திருவினையாக்கும்....!!


றிக்கப்பட்டது..,எங்கள்.,
பாரம்பரியத்தின்
அச்சாணிகள்..,!!

பறிக்கப்பட்டது.., எங்கள்..,
இயற்கையின்..,
வரங்கள்..,!!

பறிக்கப்பட்டது..,எங்கள்..,
விவசாயத்தின்
ஆயுள்கள்..,!!

பறிக்கப்பட்டது.., எங்கள்..,
ஆவினங்களின்
சுவாசங்கள்..,!!

பறிக்கப்பட்டது..,எங்கள்..,
வீரத்தின்  அடையாள
விளையாட்டுகள்..,!!

பறிக்கப்பட்டது.., எங்கள்
தமிழனின்..,
தலையெழுத்துக்கள்..,!!

வீறு கொண்டு எழுவோம்..,
விதியை வீதியில்..,
விளையாட  விடுவோம்..,!!

எதிரிகளுக்கும் எரிச்சல் வருகிறது..,
இளைய தலைமுறைகள் விழிக்கும் ..,
முறைக்கண்டு..,!!

பல விதைகள்.., மண்ணுக்குள்..,
மடங்காமல்..,
வெடித்து கிளம்பும் ஒலிகள் கேட்டு..,!!

இளையவர்களின் இரும்பு நெஞ்சில்..,
உறுதி எனும் உத்வேகம்..,
பிறந்ததே என்று..,!!

நிமிர்ந்து நில் மானிடா..,!!
முயற்சி திருவினையாக்கும் ..,
பெரியவர்கள் சொன்னார்கள்..,!!

இதோ..,முயற்சி ஒன்று..,
திரு  விளை..,யாடலாக ., நடந்து..,
கொண்டிருக்கிறது..,!!

திரு வினையாகும் என்ற..,
நம்பிக்கையில் ..,!!

விருட்சங்கள் வீதிகளில்..,
வியூகம் நடத்துகிறது..,!!

விண்மீன்கள் போருக்கு ..,
தயாராகி கொண்டிருக்கிறது..,!!

மேகங்கள் உலக மைதானத்தில்..,
யாக ஊர்வலம் நடத்துகிறது..,!!

நம்பிக்கை வெண்ணிலா..,
கையில் கிடைக்கும் என்று..,!!

நாளை ஒரு புதிய உலகம்..,
வாசல் திறக்குமென்று ..,!!

                                   
                  உமா நாராயண் (குமரி உத்ரா)


Tuesday, January 17, 2017

மனம் ...,!! சிறுகதை..!!!

  அனிஷ் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

                 அவள் கண்ணீரைத் துடைத்து.., அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது. குற்ற உணர்வில் மனம் படபடத்தது.!!

                அவளையே பார்த்துக் கொண்டிருந்த அனிஷ் அவள் தன்னை  பார்ப்பது தெரிந்ததும் முகத்தை தாழ்த்திக் கொண்டான்.
.
         அவள் கோபமாக திரும்பி முறைத்து விட்டு தன் பஞ்சு பாதங்களை வைத்தால் தரைக்கு வலிக்குமோ...? என்பது போல மிக மெதுவாக நடந்துப் போனாள்.!!.  
                அனித்ராவின் கோப முகம் அவனுள் சங்கடத்தை ஏற்படுத்தியது.  தான் அவளை அடித்திருக்க கூடாதோ…?

             யோசித்தவன் அவளிடம் சாரி சொல்ல வேண்டும் போலிருக்க மனம் படபடக்க அம்மா பார்க்கிறாளா...?  என கிச்சனுக்குள், ஒரு பார்வைப் பார்த்து விட்டு அவளைப் பின் தொடந்தான்.

             அவளை வழிமறித்து முன்பு போய்   நின்றவனை, அவள் திடுக்கிடலோடு பயமாய் பார்த்தாள் .அவள் மனம் திக்,திக் என அடித்துக் கொண்டது..!!
     அவன், அவளை நெருங்கி..,நெருங்கி  மெல்ல அணைத்துக் கண்களில் வழிந்த நீரைத்  துடைத்து விட்டு, அவள் நெற்றியில்.., மெல்ல.., மெல்ல இதழ் பதித்தான்.!!

       “”சாரிம்மா ..அனித்ரா, என்னோட கரடி பொம்மையை நீ தான் எடுத்துருப்பேன்னு தவறா அடிச்சிட்டேன். அம்மாகிட்ட சொல்லிடாதேம்மா!”

        அவன் அழும் குரலில் சொல்ல, அவள் சொல்ல மாட்டேன் என தலையசைத்தாள்.

                மறுபடி ஒரு முத்தம் பதித்து..,”” நாம விளையாடலாமா”” கேட்டபடி, மனதில் எழுந்த சந்தோச துள்ளலோடு.., ஆசைத்தங்கை அனித்ராவை கைப்பிடித்து அழைத்து சென்றான் நான்கு வயது அனிஷ்.!!

       அங்கே ஒரு பாசப் போராட்டம் மறுபடி..., களை கட்ட ஆரம்பித்திருந்தது..,!!!   


               உமா நாராயண். (குமரி உத்ரா)

Wednesday, January 11, 2017

புலரி.. எனும் பூங்காவனம் ..,!!


கைக்குள் ஒரு உலகம்.., !!
விரல் நுனிகளில் ஒரு வித்தை..,!!


முக.., வரியை பார்க்காமல்..,

முகவரியோடு விரல் குலுக்கும்..,,
விளையாட்டு மைதானம்..,!!


கண் விழிக்கும் போதே..,

கச்சேரி களை கட்ட..,
கண்ணாம் பூச்சி விளையாட்டில்..,
கண்ணோடு கைகுலுக்கும் உற்சாகம்..,!!


செல்லினத்திலும்., ஆங்கிலத்திலும்..,

அச்சு கோர்க்கும் ஒரு அடையாளம்..,!!
வார்த்தை சித்திரங்களை ..,செதுக்கி..,
புடம் போட்டு,..,அனுப்பும் அசையா கல்வெட்டு...,!!


எழுத்தெனும் விதைகள் விதைத்து..

வார்த்தைகளை..,பதியமிட்டு..,
சிறுதுளி.., பெரும் துளியாய்.
சொல்மழையை அனுப்பி தரும்..,
ஆகாய மேகமிது..,இந்த அடங்கா புலரி..,!!


சில நேரம் இளைப்பாற..,

சில நேரம் கதை பேச..
சில நேரம் காயங்கள் ஆற்ற..,


பல உதவிகளும் முத்தாய் தரும்..,
சொத்தாய்.., தைத்தாய்.., எங்கள் மனதை..,
விரலுக்குள் வித்தாய் ஒளிந்திருக்கும் புலரி..,!!



கொஞ்சம் இளைப்பாரி பாருங்கள்..,!! 
எத்தனை வயதே ஆனாலும்..,
தட தடக்கும் தட்டானாய்..,,,
பட படக்கும் வண்ணத்துப் பூச்சியாய்..,


நீங்களும் இந்த பூங்காவனத்தில்..,

பாதம் பதிக்க வருவீர்கள்..,!! 
புது உலகத்தை சிருஷ்டிப்பீா்கள்..,!!! 



                               
                                      உமா நாராயண்  (குமரி உத்ரா )

         

  

வரவேற்பு ...,!!


பூத்தது புது ஆண்டு..,

வரவேற்போம் வாசல் தோறும்..,

இவ்வினிய ஆண்டு..,!!


பன்னிரண்டு இதழ்களிலும்..,

வண்ணங்களும்., வாசங்களுமாய்..,

நம்மை வரவேற்குது..,வசந்தமாய்..,

இவ்வினிய ஆண்டு..,!!


பூத்தது புது ஆண்டு..,

வரவேற்போம்.,சிவப்பு கம்பளம் கொண்டு..,

பூமித்தாயின் செல்ல மகனாய்.,

தாயின் விரல் பிடித்து..,


தத்தி நடை நடந்து..,

தரித்திரத்தை உள்ளங்கை தூசியாய்..,

ஊதி தள்ள வந்த..,உன்னத ஆண்டு..,!!


பூத்தது புது ஆண்டு..,

வரவேற்போம்..,!!

வானுயர மனம் கொண்டு..,வளங்கள்

வாசல் தோறும் பாய் விரிக்க..,


மனவானில் மகிழ்ச்சி..,

பறவைகளை பறக்க விட..,

வரவேற்போம் இந்த..,

மகோன்னத ஆண்டு..,!!


பூத்தது புது ஆண்டு..,வரவேற்போம்..,!!

பல்லாயிரம் கரங்கள் கொண்டு..,

பரண்களில் படுத்து உறங்கும்..,

சில மர்ம பூனைகளின்..,


முகத்திரைகளை  கிழித்து..,

புது முகவரிகளை..,

அறிமுகபடுத்தும் என..,

ஊரெங்கும் எதிர்பார்க்கும் ஆண்டு..,!!


வரவேற்போம் விசேசமான ஆண்டு..,!!

வர்ணம் இழைக்கும்.., புது கனவுகளை..,

புதிராய் ஒளித்து வைத்திருக்கும்..,


பொக்கிஷ புத்தாண்டே..,

வரவேற்கிறோம்..,வருக..,வருக.,

பொங்கிய எம் மனங்களை..,

இளநீராய் தணிக்க..,!!!


                      
            உமா நாராயண்,(குமரிஉத்ரா) 

    

Tuesday, January 10, 2017

விழிகள் _ சிறுகதை...!!!

   
     கார்த்திகா இரு வாரமாக, கவனித்து கொண்டுதான் இருக்கிறாள். பூக்கள் விற்க வரும் வேணி.., கார்த்திகாவின் மகள் காவ்யாவை..,  அடிக்கடி வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பதை..,! 

 காவ்யா..,  .,கார்த்திகா, ராகவனின் ஐந்து வயது மகள்.!!

          பூக்களை கொடுக்கும் சாக்கில், காவ்யாவிடம் பேசுவதும்., அவளை விழி நோகாமல் பார்ப்பதும்.., ம்ஹூம்.,இந்த வேணி சரியில்லை...!!

      கண் திருஷ்டியில்.., குழந்தைக்கு ஏதாவது வந்து விட்டால்.,? ராகவனிடம் சொல்லி, எச்சரிக்க வேண்டும்.! நினைத்தபடியே வெளியே வந்தாள்.

     இதோ, வேணி வந்து விட்டாள்.“”அம்மா என்ன பூ வேணும்மா..??”

 “”பூக்கள் வேண்டாம் நீ போ””. கார்த்திகா அவசரமாக சொன்னாள்.

     தோட்டத்தில் டாமியோடு விளையாடிக்கொண்டிருந்த,காவ்யா..,"பாட்டி பூ வேணும்..! அம்மா, பாட்டி தினம் எனக்கு..,பூ வச்சி விடுவாங்க. பாட்டி அந்த ரெட் கலர் ரோஜாப்பூ..,எனக்கு வச்சி  விடுங்க பாட்டி...," சந்தோசத்தில் சத்தமிட்டாள்.

       “என் பட்டுக்குட்டி.,உனக்கு இந்த ரோஜாப்பூ நல்லா இருக்கும்.நீ நல்லா இருக்கணும்.”கன்னத்தை மெல்ல வருடினாள் வேணி.””

    "பாட்டி நாளைக்கு வெள்ளை சாமந்தி கொண்டு வருவியா பாட்டி..?"

     ”என் கண்ணு.., உனக்கு இல்லாத பூவா.?” பாட்டி நாளைக்கு கொண்டு   வர்றேன்”.கன்னத்தில் முத்தமிட்டவள் ,பூக்கூடையை எடுத்தபடி நடந்தாள்.

 “காவ்யா உள்ளே வாடி..,அதட்டலாய் அழைத்தாள் கார்த்திகா.

      வேணியின் மனக்கண் முன் மகன் சுரேந்தர் முகம் வந்து போனது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில்.., இறந்துபோன செல்ல மகனின் கண்களை,  காவ்யாவின் சின்ன முகத்தில் கண்ட போது., ஏதோ தன் மகனையே கண்டு விட்ட மகிழ்ச்சி..!!

மௌனமாய் அழுத அந்த தாயுள்ளம்..., நாளைக்கு சாமந்தி பூ வாங்கிடனும். நினைத்தபடி மெல்ல நடக்க ஆரம்பித்தது..!! 


                உமா நாராயண் (குமரி உத்ரா)

        
.    

      

Friday, January 6, 2017

தை மகளே வருக...,!!!

                     
தை மகளே.., தையலே., 
உன் பாதம் 
எடுத்து வருகவே...,!!




பழையன கழித்து.,
புதியன புகுத்தி..
,
இல்லங்களை, வர்ணங்களில் 
வசியப்படுத்தி..!!
,
அகமும் புறமும்
சுத்தப்படுத்தி..
,
ஆனந்தமாய் 
வரவேற்போம் போகி..,!!

சாணத்தில் இளைத்த முற்றம்,
மாக்கோல வசீகரம்.,

சிரிக்கும் பச்சையரிசி., 
மனம் இனிக்கும் கரும்பு..,!!

வர்ணங்களில் மெருகே(ற்)றிய
பானைகள்.,

பக்கத்தில் மஞ்சள் நாற்று., 
மணக்கும் கொன்றை பூ.,!!

பாகாய் வெல்லம்.,
தேங்காய் பூ தூவி.

பதமாய் தலைநிமிர., 
ஆதவனும் கண் சிமிட்ட..,

புத்தாடைகளிலும்.,
குலவைகளிலும்
கர்வமாய் எம் மக்கள்..,!!

ஏரும்,கலப்பைகளும், 
எங்கள் தாத்தனும்..,

தலைசிலுப்பும்
காங்கேயங் காளைகளும்.!!
,
கழுத்தில் வெண்கல மணியும்.,
சிரிக்கும் செவ்வரளியும்.,

கொம்புகளில் தீட்டிய., 
அழகு வர்ணங்களும்..,

நனவென்று நாள் சொல்லுதடி..,
கனவொன்று கை கூடுதடி..!!

வசந்தமும்.,
வாசல் வந்ததடி ..,!

தையலே.., தை மகளே..  
உன்னழகு நடை பயின்றடி..,!!
                                          
                                
                               உமா நாராயண் .(குமரி உத்ரா)

                                                      



புத்தாண்டே வருக..!!!

பூத்தது புத்தாண்டு..,
புத்தாண்டே வருக.., பூரிப்பாய் வருக..!!

வசந்தம் வேண்டுமென  வரவேற்கிறோம்...,!!!
உன் பொற்கரம் கொண்டு முகம் மறைக்காதே..,!!

நாணி விட்ட நாணல்களும்.,தலை சாய்க்கும் நெற்கதிரும்..,
காணவில்லை என்ற தாபமா.,??

படர்ந்து சிரித்த அல்லியும், வெண்(செந்)தாமரையும்.,
வாகாய் படர்ந்திருந்த ஊதாக்கொடியும்.,உதிர்ந்து போன அவலமா.,?

வேய்ந்த பனையோலையிலும் .,தென்னங்கீற்றிலும்
சாண முற்றத்தில் மேய்ந்த மழலைகளும்.,இடமின்றி ஓடிய கதையுமா.,?

பல பச்சை தருக்களும்., இச்சை மனிதருக்காய்.,
உயிர் விட்ட ஓலமா .,??

என்ன இது.,? ஒரு வருடம்.,ஒளிந்திருந்து
வருவதற்குள்.,ஓடாகி போனது எம் நாடு., என்ற கழிவிரக்கமா .,??

பதினேழாம் ஆண்டிலாவது.,பட்டாம்பூச்சியும் தட்டானும்
வர்ண கலவை பூசி., வானெல்லாம் பறக்கட்டும்.,!!

எந்நாடு சுற்றினாலும்., எம் சொந்தங்கள்.,
வேய்ந்த கூரையின் கீழ் ஓடி விளையாடட்டும்.,!!

ஆலும்., வேலும்.,பச்சை தருக்களும்,ஆகாயம் வரை.,
வான் முட்ட வளரட்டும்.!!

அகல வாய் திறந்த குளங்களிலும், ஆறுகளிலும்.,
கயல் விழி மீன்கள் கட்டியம் பாடட்டும்.,!!

அல்லியும்., தாமரையும்.,ஆதவனிடமும், 
நிலவிடமும் ரகசியம் பேசட்டும்.,!!

நாணிய நாணலும்., கர்ப்பத்தில் கதிர்களை சுமந்த.,
நெற்கதிர்களும், பசுமையாய் பாய் விரிக்கட்டும்.,!!

வர்ணம் இழைத்த புது கனவுகளை.,
புதிராய் ஒளித்து வைத்திருக்கும்.,

பொக்கிஷ புத்தாண்டே.,வருக, வருக..,!!
பொங்கிய எம் மனங்களை .., இளநீராய் தணிக்க..,!!! 

                                         உமா நாராயண் (குமரி உத்ரா)

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...