Saturday, February 25, 2017

பெண்...,!!!

அவள் சிரிப்பு மழையில்..,
நனைந்து..,ஜலதோசம்..,
பிடித்துக்கொண்டது..,!!

அவள் விழிகளின் ..,
புதிரில் புதைந்து..,
புத்தி பிழையானது..,!!

அவள் முக வடிவில்..,
கட்டுண்டு..,
உலகம் என்வசமானது..,!!

அவள் உடல் மொழி..,
என்னை..,
துறவறம் கொள்ள..,
வைத்தது..,!!

கடைசியில்..,
என் காதல் வலையில்..,
அவள் விழி மீன்கள்..,
மட்டுமே மாட்டியது..,!!

                                    உமா நாராயண்,(குமரி உத்ரா)



 

Saturday, February 18, 2017

கவிதையும் ..., காதலும்..,!!!

   




கவிதைகள் இல்லா..,காதலுமில்லை..,
காதல் இல்லாத..,கவிதைகளுமில்லை..,!!
காதலை எழுதாத..,கவிஞனுமில்லை..,
கவிஞனுக்கு..,காதல் தீரா தொல்லை..,!!

மூங்கிலி்ல் காதல் கொண்டு..,
தென்றல் புல்லரிக்கும்..,புல்லாங்குழலாய்..,
கவிதை இசை படைக்கவில்லையா..,??


இலக்கை தேடி விரையும்..,பறவையின் ஒற்றை சிறகு..,
காற்றோடு கை கோர்த்து..,பரந்த வானில் பறந்து..,
கவிதை ஒன்று படைக்கவில்லையா..,??


மரங்கொத்தி பறவைகள் போல..,
காதல் மனம் கொத்தி போக..,கவிதைகளும்..,
இதமாய் இறகு விரிக்கிறது..,!!


காற்றோடு கை சேர்க்கும்..,இலவம் மரத்து பஞ்சு போல..,
கை குலுக்கி வரவேற்கிறது..,
காதலும்.., பக்கத்து வீட்டு கவிதையும்..,!!


மூழ்கிபோன கப்பலில்..,மூழ்காத சிந்தனைகளோடு..,
வண்ணக்கலவை மீன்கள்..தூண்டிலையும் ஊஞ்சலாய்..,
சில நேரம் நினைப்பது.,காதல் என்னும் கவிதைக்கு..,!!


சிலந்தி வலையாய் காதல்..,அதில் ஒட்டியுள்ள ஈயாய்..,
பறக்கவும் முடியாமல்.., விழவும் முடியாமல்..,
பரிதவிப்பது கவிதைகள்..,!!


வில்லின் நாணிலிருந்து..,கவிதை எனும் அம்பெய்தும்..,
அடங்க மறுக்கும் சில..,தாகம் தீரா காதல்கள்..,!!
காதலுக்கும் அழிவில்லை..,கவிதைகளுக்கும் ஓய்வில்லை..,!!


காதல்கள் ஒன்றிணைந்து...,
புது ஜனனத்தை உருவாக்கி தருகிறது..,!!
கவிதைகள் ஒன்றிணைந்து..ஜனனங்களின் இதயங்களை..,
கொள்ளை கொள்கிறது...,!!


காதலுக்கோ.., ஆயுளில்லை..,!!!
அதனால் கவிதைகளுக்கும்..,
மரணம் இல்லை...,!!!


               உமா நாராயண், (குமரி உத்ரா)

Monday, February 13, 2017

வானொலிக்கு.., ஒரு வாழ்த்து ...,!!!







   






னிய வானொலிக்கு..,
வானொலி நாளில்.,
வளர் பிறை வாழ்த்துக்கள்..,!!

வசந்த தூறலே..,
எங்கள் வாசல் ஓடி வந்த..,
தேவதை  நீ..,!!

இன்ப சாரலே..,
காற்றோடு கை குலுக்கி..,
காதோரம் உரசிய
காதல் அம்பு நீ..,!!

உருவம் தெரியாது..,
உணர்வுகளில் பதிந்து போன..,
உதயம் நீ..,!!

உயரமாய் நின்று.., உயர்வாய் பேசி..,
பட்ட மனங்களை..,
தொட்டு, சிறைப்பிடித்தாய் நீ..,!!

காலைத் தென்றலாய்..,
கவி இழைத்த..,
காதல் வரிகளை..,
காதோரம் நனைத்தாய்..,!!

வேக்கப் தமிழனாய்..,
உலக விஷயம் பேசி..,
உயிர்ப்பாய் எழ வைத்து..,
சொந்தங்களுக்கு..,
சந்தம் வாசித்தாய்..,!!

ஸ்டைலிஸ் தமிழச்சியாய்..,
சினிமாவில் உதிர்த்த..,
விஷயங்களையும்..,
உடலின் மருத்துவ..,
எச்சரிக்கையும், தந்து..,
எங்கள் தலை நிமிர்த்தினாய்..,!!

கிளாசிக் மேட்னியாய்..,
திசை எட்டும்.., செய்திகள் தந்து..,
மயிலிறகால் வருடும்..,
மகரந்த பாடல்களை..,
எண்பதின் கனவு பாடல்களாய்..,
உள்ளத்தில் தைத்தாய்..,!!

ஹை5 வித் நிம்மியாய்..,
நிமிர்ந்த பேச்சில்..,
சிகரம் தொட்டு..,சிறகடிக்க வைத்து..,
சிங்கமாய்.., கர்வமாய்..,
கலைந்த இதயங்களை..,
தேனீயாய் சேகரித்து..,
சென்றாய்..,!!

வாட்ஸ் அப் தமிழனாய்..,
குற்றாலத் தூறலாய்..,
இன்ப சாரலாய்..,குயிலின்..,
குரலை உள்ளடக்கி..,
ஒயிலாய் உள்ளங்களுக்கு..,
வலை வீசினாய்..,!!

இரவும்.., இசையுமாய்..,
வெண்கல குரலின் வலிமையால்..,
எங்களை..,ஓவியமாய்..,
சிறை பிடித்து..,
அமர காவியங்கள் தந்து..,
கவிதை சொல்லி.., கதைகள் பேசி..,
ஓராயிரம் இதய வாசல்களை ..,
கொள்ளை கொண்டு போனாய்..,!!

உன்னால் வசம் இழந்து போன..,
எங்கள்..,இதயங்களை..,
எப்போது கொண்டு வந்து..,
சோ்க்க போகிறாய்  நீ..,
தமிழ் 89.4 எப்.எம்.....!!! 

                  உமா நாராயண்.,( குமரி உத்ரா)

Friday, February 10, 2017

கனவுகளில் கசியும் குருதி...,!! (கவியருவி இதழில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை)






நாளை மலர..,இன்றே முதல் இதழை விரிக்கும்..,
ஒற்றை ரோஜாவின்..,
ஓராயிரம் ரகசியம் போல..,
பூ பூக்கும் ஓசைகள் தான் காதல்..,!!

மல்பரி மரத்து மகோன்னத சிறப்புகள் போல..,
நாளைய சந்தோசம் தந்து..,
இன்றே..,சாகத் துணிந்த..,
பட்டு புழுக்களின் காதல்கள்..,!!

சிலந்தி வலையாய்..,அதில் ஒட்டியுள்ள ஈயாய்..,
பறக்கவும் முடியாமல்.., 
விழவும் முடியாமல்..,
பரிதவிக்கும் பல காதல்கள்..,!!

இதய நாணிலிருந்து விடுபட்டு..,விழிக்குளத்தில்..,
தவறி விழுந்து பார்வை அம்புகளை..,
பரவசமாய் சேர்த்து வைக்கும்..,
பருவக் காதல்கள்..,!!

கனவுகளை நெஞ்சத்தில்..,செதுக்கி.., பதுக்கி..,
காயப்பட்டு விளக்குகளில்..,
தவறி விழுந்த..,
விட்டில் பூச்சிகளின் காதல்கள்..,!!


கசிந்து உருகும் குருதி மழையாம் காதல்..,!!
நித்தம், நித்தம் பூக்கிறது..,
சில குருதிகளை சிந்தி..,
சில குருதியை கண்களில் தேக்கி..,


சில குருதிகளில்..,குளித்தாடி..,
பல குருதிகளில்.., கூத்தாடி..,
காதல், காதல் இல்லையேல்...,???

              
           உமா நாராயண், (குமரி உத்ரா)
                     


Sunday, February 5, 2017

நிறங்கள்...,!!





நிறத்தில் என்ன கண்டாய்..,??
நிஜத்தை சொல்லு மனிதா..,??

சீதையின்  சிறப்புகளையும்..,
கண்ணகியின் கற்பு நெறியையும்..,
காவியங்களில் காண்கிறோம்..,
கண்களில் ஒற்றிக் கொள்கிறோம்..,!!



இதிகாசங்களை மதிக்கிறோம்..,
இங்கே.., எத்தனை சீதைகள்..,
ஸ்ரீ ராமன்களுக்காக காத்திருக்கிறார்கள்..,??

தட்சணை கேட்கும் பண பேய்களுக்கு..,
தீனி போட்டு விடலாம்..,!!
கருப்பு என்றால் வெறுப்பாகும் ..,
மனிதர்களுக்கு என்ன கொடுப்பது..,??

வெள்ளாவி வைத்தால் தான் பெண்கள் அழகு..,
என்று எந்த பிரம்மன் எழுதி  வைத்தான்..,!!

கருப்பு என்றாலும் திரும்பி பார்க்கும்..
ஆழகு..,அங்கே..,!!!  திறமையை பார்..,!!
சாதிக்கும் பெண்களை பார்..,!!

அப்போது உண்மை புரியும்..,
அக.., அழகு தான்..,
நிஜத்தில்.., அழகு என்று...,!!

                             
                  உமா நாராயண்(குமரி உத்ரா)




Wednesday, February 1, 2017

வெரசலாயிட்டேன்...,_ சிறுகதை ....,!!!

     


          நிரஞ்சனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை அவள்அவள்.., என்னையே கவனிக்கிறாள்..? ஏன்  புரியவில்லை..கண்களை உயர்த்தி, ஜன்னல் கம்பிகளுக்குள்ளே நிலவாய் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்தான்.

      முத்து பற்கள் தெரிய அவள் மெல்ல சிரிப்பது போலிருந்தது. இவனுக்குள் ஆனந்தம்.. அணை போட  முடியவில்லை.சாலையில் யாரும் கவனிக்கிறார்களா?  என கவனித்து மெல்ல கைகளை ஆட்டினான். அதோ அவளும் இரு கைகளையும் ஆட்ட இவனுக்கு எங்கேயோ பறப்பதுப் போலிருந்தது.  நிச்சயம் அவள் தன்னைப் பார்த்துத் தான் கைகளை ஆட்டுகிறாள் அவன் தன்னிலைக்கு வர சிறிது நேரம் ஆனது.!!

     நிரஞ்சன் தன் எதிர்வீட்டில் குடிவந்திருந்த அந்த அழகான குடும்பத்தை அடிக்கடி நினைத்துக் கொண்டான், அதிலும்,அவர்களின் அழகான மகள், அவள் பெயரும் கூட எவ்வளவு அழகு!.

     மறுநாளே, தன்னை ஒரு முறைக்கு நாலுமுறை கண்ணாடியில் பார்த்து..,. இளநீலக்கலர்  ஜீனஸ்ம், டார்க் புளுவில் சர்ட்டும் அதற்கேற்ற வடிவமாய் வெளியே வந்தவனை அம்மா ஒரு மாதிரி பார்த்தாள்
.
       என்ன நிரஞ்ச் எங்கே போறே?”

       “என்னோட பிரெண்ட ஆனந்தைப் பார்க்கம்மா பொய் கூட அழகாக வந்தது.

        ஏனோ அவள் வீட்டின் முன்பு போகும்போதே இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது.  அவளும் ஜன்னல் வழியாக இவனையே பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தாள். நிரஞ்சனைப் பார்த்து கை அசைத்தபடி வந்தவள் சிரித்தபடி திடீரென உள்ளே ஓடினாள்.;

     அவனுக்குள் ஓரு சின்ன கோபம் தினமும் பார்க்கிறாள் சிரிக்கிறாள். ஒரு வார்த்தைக் கூட பேசவில்லையே..! ஏன் இந்த மௌனம்...? வெட்கமோ..!?,; அவன் ஒரு முடிவோடு வீடு நோக்கி சென்றான்.!!

     மறுநாள், அவளின் வீட்டருகில் வரும்போதே கவனித்தான் அவள் தோட்டத்தில் நின்றிருப்பதை..., மெல்ல பாதம் பதித்து சத்தம் இல்லாமல் உள்ளே சென்றவன் மிஸ் மௌனிகா.., உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.’’ ‘’எத்தனை நாளைக்கு இப்படி சிரிச்சிட்டே இருப்பீங்க...  பிளீஸ் இன்னைக்காவது நாம கொஞ்சம் பேசவோமேஎன்றவனை மௌனமாய் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.!!

        ஓ மௌனம் தான் சம்மதத்திற்கு அடையாளமோ..? என்று சிரித்தபடி வந்தவன் அதிர்ந்து நின்றான்.

    வேகமாக வந்து நின்ற அந்த வேனிலிருந்து இறங்கியவர்களிடம், அவள் தந்தை தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

     டாக்டர் இப்போ மூணு மாசமா, அவளுக்கு நோய் கூடியிருக்குன்னு நினைக்கிறேன்  எப்பவும், மௌனமா  இருக்கிறவ இப்போல்லாம் அடிக்கடி சிரிக்கிறா!!  சாலையில் போறவங்க  யாரைப் பார்த்தாலும் கை அசைக்கிறா..! அதனால் அவளுக்கு இந்த பைத்தியம் தெளியறது வரை ஆஸ்பத்திரியிலே இருக்கட்டும் டாக்டர் !” அவள் அப்பா சொல்ல.., சொல்ல..,

    இவன் யாருக்கும் தெரியாமல்  நொறுங்கி கொண்டிருந்தான்.!!

             உமா நாராயண்.(குமரி உத்ரா)

                                            

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...