Thursday, March 7, 2019

பெண்ணே பெருமை கொள்..,!!!








பெண்ணே பெருமை கொள்..,
பெண்ணாய் பிறந்ததற்கு..,!!


வாசம் வீசிய மலர்கள் கூட..,
உனைப்பார்த்து..,
மௌன மொழி பேசட்டும்..,!!

விண்ணில் நீந்தும்..,
வெண்மதியும்..,
உனைக் கண்டு வியக்கட்டும்..,!!

ஆர்ப்பரிக்கும் கடலலை கூட.,
கொலுசு கால்களில்
சரணடையட்டும்.,

இதமாய் வீசும்.,
தென்றல் காற்று கூட.,
வீச மறந்து சுவாசம் முட்டட்டும்.,


மண்ணை  முட்டி முளைத்து
நிற்கும்  விதைகள் போல..,
நீயும்  விண்ணை தட்டி உயர்ந்து  நிற்கிறாய்..,!!


 வாழ்க்கை எனும் நாலெழுத்தில் மடங்கி
போகாமல்.,
வளர்ச்சி எனும்., பாதையில்
 நீ தனித்துவம் பெற்றாய்.,!!


தாகம் தீரா நதிகள் போல.,
லட்சியம் எனும் கடலை நோக்கி..
நீ  விரைந்து  செல்கிறாய்..,!!


இங்கே மகுடம் சூட்ட.,
மணிமுடி தரிக்க.,
யாருக்கும் நேரமில்லை.,


கவரி மான்களுக்கு .,
இங்கே  கர்வமில்லை..,

பெண்ணுக்குங்கே.,
 வீழ்ச்சியில்லை..,!!


பெண்ணே  பெருமை கொள்.,
பெண்ணாய் பிறந்ததற்க்கு..,!!




                உமா நாராயணன்., (குமரி உத்ரா )


Tuesday, March 5, 2019

புவியோடு பேசுவோமா..,!!!





குயில் கானம் பாடி.,
சேவல் கூவி.,
காக்கை கரைந்து.,
பட்க்ஷிகள் பறந்து.,


சாண முற்றத்தில்..,
கால் தோய்த்து.,
அமைதியான.,
அதிகாலை விடியல்.,


சுத்தம் தந்து.,
சுவாசம் தந்து.,
நெஞ்சம் நிறைத்து.,
கொஞ்சும் புவி...,!!


சிறு தூறல் ரசித்து.,
வானவில் பார்த்து.,
மேனி தழுவ.,
ஓடும் தண்ணீரில்.,


மழையோடு
மனசாரப்பேசி..,
குளித்து, குதூகலித்து.
மறு நாள் விரியும்.,


குடைக் காளானில்.,
முகம் பார்த்து.,
மகிழ்ந்த புவி..,!!


கார் மேகம் காணாது.,
வெப்பக்
கூட்டுக்குள்.,
விதைகள் நசுங்கி..,


நா வறண்டு.,
மேனி வெடித்து..,
மழை என.,


 எழுதிப் பார்த்து., 
வானம் பார்த்து.,
வெம்பும் புவி..,!!


வெறுமை ஓட்டில்.,
கடலை வறுப்பது போல்.,
காய்ந்த வெயிலில்.,
தீய்ந்து தேய்ந்து.,



பச்சை மரங்களை.,
இச்சையாய்.,
எதிர்பார்த்து.,
நிச்சயமாய்., நிர்கதியான..,


நம் வாழ்வை.,
சொல்லாமல்.,
சொல்லும் புவி..,!!


வற்றிப்போன.., 
ஆறுகளும்., 
மூடிப்போன.,
குளங்களும்.,


நெகிழிகள் கடலோடு.,
கலக்கும் அபாயமும்.,
கை பேசிகளின்.,
பரிமாணமும்.,


வாகனப் புகை..,
வளையமும் சேர்ந்து.,
சுவாசம் அற்று.,


நுரையீரல் தேய்ந்து.,
நம்மை பார்த்து.,
கதறும் புவி...,!!


புவியின் கதறலில்
இன்று கடந்து தான்.,
போகிறது.,


கட்டிய அபார்ட்மென்ட்டும்
சேர்த்து   அணைத்த    
செல்பேசியும்.,
ரோஸ் மில்க் பணக் கட்டும்.,
பக்கமிருக்க.,



நாளை நம் தலைமுறை
இருக்குமா...???
புவியின்  வெப்பத்தில்..,!!



                உமா நாராயணன்.(குமரி உத்ரா)

Monday, January 14, 2019

தை மகள் வந்தாள்..,!!



தையல்  அவள்
வானவில் வண்ணம் குழைக்க.,
தூரிகை எடுத்தாள்.,!!

அத்திப் பூவாய்..,
அகம் மலர்ந்தாள்,!!

தித்திக்கும் தை மாதத்தில்.,
முதலடி வைத்தாள்.,

பச்சரிசி பொங்கலும்.,
இள   மஞ்சளும்.,

சேதி கேட்ட செங்கரும்பும்., 
கதிரவனை தேடின.,!!

பொங்கலோ பொங்கல் என,
பூரித்துப் போயின..,!!

நெற்கதிர்கள் நாணின..,!
ஏறும் கலப்பையும்  வீரம் பூட்டின.,!!

கொம்புகளில் வர்ணம் தீட்டிய
மாடுகள் மகிழ்ந்தன.,!!

பொங்கட்டும் பொங்கல்.,
தங்கட்டும்  திங்கள்.,!!

பொழியட்டும் வானம்..,
விளையட்டும் விளைச்சல்.,!!

செழிக்கட்டும் தேசம்.,
நிலைக்கட்டும் நேசம்.,!!


                       உமா நாராயண். (குமரி உத்ரா)








சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...