Friday, December 16, 2016

அம்மா ......!!

                           

  முதல் சூடு, முதல் பசி ..,
  முதல் யுத்தம் , கால்களை உதைத்தோம் ..,
  அம்மாவின் கருவறையில் ..!
  முதல் பாதம் பூமியில் பதித்தோம் .., 
  அம்மாவின் முனகலில் ..!
  முதல் சத்தம்..,
  அம்மாவின் அரவணைப்பில் ..!
  முதல் முத்தம்..,
  அம்மாவின் இதழ் சத்தத்தில் ..!
  முதல் தவழல்..,
  அம்மாவின் புன்னகையில் ..!
  முதல் நடை..,
  அம்மாவின் கண்காணிப்பில் ..!
  முதல் எழுத்து.., அம்மா  எழுதினோம்..,
  அவளின் ஆசீர்வாதத்தில் ..!
  இன்றொரு மகவாய் வளர்ந்தோம் ..,
  அம்மாவின் பெருமிதத்தில் ..!
  நூறு வருடங்கள் வாழ்ந்தாலும்..,
  பத்துமாத வளர்ப்பு மறப்போமா..?
 மறந்தால் மனிதனாவோமா ..?
                              உமா நாராயண், (குமரி உத்ரா)

மங்கைக்கு ஒரு வாழ்த்து..!!



 மங்கைக்கு ஒரு வாழ்த்து.,
மலரே உனக்கு ஒரு பாராட்டு..!!

பெண்கள் பிறந்தது ஒரு இடமானாலும்,
பயன் தருவது இ ன்னொரு  இடம்..,
அழகு பூ க்களைப்போல..,!!

விதையாய்  விழுந்த அவள்,
பூக்களாய்.,  கனிகளாய்., வாசமாய்,
விருட்சமாய் மறுபடியும்..,
விதை களாய் விஸ்வரூபம் எடுப்பவள்..!!

 குழந்தையாய் ., குமரியாய்., சகோதரியாய்,
தாரமாய்., தாயாய்..,
ஆண்களின் சுவாசங்களில் கலந்தவள்..!!

மானுடம் படைத்த  இறைவி  அவள்,
பாரதி கண்ட  புதுமை  பூ அவள்,
சக்தியின் பிறப்பிடம் அவள்..,!!

சாகித்தியத்தை  புரட்டும்  சரித்திரமானவள்.,
இல்லறம் என்ற நந்தவனதேருக்கு.,
சாரதியாய்  சக்தி கொடுப்பவள்..!!

வானுலகம் வியந்து வாழ்த்தட்டும்.,
வானவில்ல்லாய் வளையாது.,
வானத்தையே வளைக்க வா..,!!

எத்தனை பரிமாணம் உனக்கு.,
பெண்ணே..,
இந்த அர்ப்பணிப்பு உனக்கு..,!!  

        

பாரதியார் _கவிதை





கலைவாணி கண்டெடுத்த..,  இந்த கவி வீணை..,
காவியம் படைக்கும்..,கவிக் குழந்தையானதே..,!!

பாரதி எனும் நாமத்தில்..,பேனா முனைகள்,
வார்த்தை புயலை கூர்தீட்டி..,தீர்க்க தரிசனம் பெற்றதே..!!

முறுக்கு மீசையும்..,நறுக்குக்  கவிதைகளும்..,
முண்டாசு கவிஞரிடம்..,மண்டியிட்டதே..,!!

பாட்டு கவிஞரின்..,மெட்டு வரிகளுக்குள்..,
மொழிச் சிறகை..,முடக்கி கொண்டதே..!!
,
தமிழ் வார்த்தை தேரை..,வடம் பிடித்து இழுத்து..,
கவிப்பேழையை சுமந்து..,தரணிக்கு தந்ததே..,!!


ஓய்ந்து மறந்த..,குழந்தைகளிடம்..,
ஓடி விளையாடச்சொல்லி..,உற்சாகம் தந்ததே..,!!

காக்கை சிறகிலும்..,சின்னஞ்சிறு கிளியிலும்..,
இன்னும் பல கவியிலும்..,மனம் இறகாய் பறந்து போனதே.,!!

பாட்டுக்கு ஒரு பாரதி..,கவித்தேருக்கோ நீ சாரதி..,!
எட்டயபுரம் தந்த..,எட்டாத உயரம்...நீ.., இந்த புவி பாரதி..,
என கர்வமாய் முழக்கமிட்டதே..,!!

அக்னி குஞ்சு ஒன்று..
கண்டேன்.., என தமிழன்னையும்..,
பெருமிதம் கொண்டாளே..,!!

அந்த அக்னிகுஞ்சு..,
எங்களின் கவி பொன்குஞ்சு..,
என எங்கள் நாவும் கட்டியம் சொன்னதே.,!!

காலமும், வென்ற பாரதியின்..,
வரலாறு சொன்னதே ..,!!

                                   உமா நாராயண்,(குமரி உத்ரா) 

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...