Monday, January 14, 2019

தை மகள் வந்தாள்..,!!



தையல்  அவள்
வானவில் வண்ணம் குழைக்க.,
தூரிகை எடுத்தாள்.,!!

அத்திப் பூவாய்..,
அகம் மலர்ந்தாள்,!!

தித்திக்கும் தை மாதத்தில்.,
முதலடி வைத்தாள்.,

பச்சரிசி பொங்கலும்.,
இள   மஞ்சளும்.,

சேதி கேட்ட செங்கரும்பும்., 
கதிரவனை தேடின.,!!

பொங்கலோ பொங்கல் என,
பூரித்துப் போயின..,!!

நெற்கதிர்கள் நாணின..,!
ஏறும் கலப்பையும்  வீரம் பூட்டின.,!!

கொம்புகளில் வர்ணம் தீட்டிய
மாடுகள் மகிழ்ந்தன.,!!

பொங்கட்டும் பொங்கல்.,
தங்கட்டும்  திங்கள்.,!!

பொழியட்டும் வானம்..,
விளையட்டும் விளைச்சல்.,!!

செழிக்கட்டும் தேசம்.,
நிலைக்கட்டும் நேசம்.,!!


                       உமா நாராயண். (குமரி உத்ரா)








Monday, December 10, 2018

மறந்த முகவரியும்.., சில மனித முகங்களும்..,!!



பிறந்த போது தாயிடம் என்னை  கையளித்த செவிலி..,!

பள்ளி சென்ற முதல் நாள் தூக்கி  கொண்டு விட்ட  தங்கமணி அண்ணன்..,!

முதல் தமிழை  நாவில் உச்சரிக்க வைத்து உயிரோட்டம் பார்த்த அழகு பாண்டியன் சார்..,!

உழவருக்கு மதிய உணவு கொண்டு சென்று  வயல் வரப்பில் தடுமாற  கை கொடுத்த    வண்டிக்காரர்..,!

உழுது  விட்டு நெல் மணிகளை விதைத்து நாற்றுக்கு உயிர் கொடுத்த விவசாயி..,!

வாய்க்கால் கரையில் ,நண்டு துளைகளில் தென்னங் கீற்று  பரப்பி நண்டு பிடித்த குட்டி நண்பர்கள்..!

பனை மரத்தின் பதநீரை இறக்கி பனையோலை பட்டைகளில் குடிக்க வைத்த பாண்டிக்காரர்..,!

நரிப்பயறும்., நாவல் பழமும்., காரங்காவும்., ஈச்சம் பழமும் அணிலாய்
கொறிக்க சொல்லி தந்த  சின்ன சகாக்கள்..,!!

அம்பலத்திப்  பூவில் தேன் குடித்து, குளத்தின்   ஆழங்களில் நீச்சலடிக்க வைத்த ஆரம்ப கால சிநேகிதிகள்..!

வானொலியின் பதிவலையில் என் குரல் வர என்னை நெறிப்படுத்திய முதல் அறிவிப்பாளர்..!

கவிதைகள் காற்றில்  வலம் வர  செவிகளால் என்னோடு கைக்குலுக்கிய  நேயர்கள்..,!.,

திருமணத்தில் தீ வலம் வந்தபோது  மந்திரம் சொல்லிய பூணுல்
அய்யர்..,!

புகுந்த வீட்டில் மணப்பெண்ணாய்  போனபோது  உறவுகளின் சுய சரிதை சொன்ன பக்கத்து வீட்டுப் பாட்டி..,!

நானும் தாயான போது தைரியம் சொன்ன இளம்
மருத்துவர்..,!

கைகளை கூட்டி., வாய் சப்பிய  குழந்தையை குளிப்பாட்டிய வெள்ளை தேவதைகள்..!

தூரத்து ஆலயத்தில் நேர்ச்சை செய்ய போனபோது ரயிலோட்டிய முகமறியா ரயிலோட்டிகள்..,!

இன்னொரு பறவையாய் ஆகாயம் பறந்து வியந்தபோது பயணத்துக்கு பலம் சேர்த்த விமான ஓட்டிகள்.!

புது தேசத்தில்  நேசக் கரம் குலுக்கி தமிழ் தாகம் தீர்த்த., அன்பின் தமிழ்ச் சொந்தங்கள்..,!

இன்னும் எத்தனையோ..,? 
இறைவனுக்குத்தான்  தெரியும்..,

வழியில் வரப்போகும்..,
முகமறியா சில முகவரிகள்..,!!!


                                                             
                    உமா நாராயண், (குமரி உத்ரா). 




Friday, October 12, 2018

" சுத்தம் "


         


ந்தனா  வாசலை சுத்தமாகப்  பெருக்கி  கோலமிட்டாள்.  கைகள் வளைந்து  நெளிந்து கம்பிக் கோலம்  சிக்கலாகிப் போனது.  சிக்கலை சீர்படுத்தி கோலத்தை  ஒரு வழியாய்  முடித்து  வைத்தாள்.


     கோலத்தின்  நடுவே  சாணத்தை வைத்து., பூசணிப் பூவை  சிரிக்க விட் டாள்.  தன்  நெற்றிக்கு  பொட்டிட்டு, இரண்டரை  வயது  குழந்தை மதுவை   தூக்கிக் கொண்டு  சுந்தரியின்  வீ ட்டின்  முன் வந்து  நின்றாள்."

     "அக்கா,  நான் வார வரைக்கும் புள்ளையை  பார்த்துக்கக்கா. ஆயா கடையில வாங்குன  இட்லியும், இடியாப்பமும் இருக்கு . குழந்தை அழுதா  குடுத்திருக்கா."

  பால் பாட்டிலை  குழந்தை கையில் கொடுத்து  விட்டு  விடுவிடுவென  ஓரமாய் நின்குப்பை  வண்டியை , இழுத்தபடி நடந்தாள்.  


  வந்தனாவந்துட்டியா.., இரண்டு  நாளா குப்பை எல்லாம்  நிறைஞ்சுடுச்சி .., நீ எப்போ   வருவேன்னு  பார்த்திட்டு  இருந்தேன். சொன்னபடியே  பார்வதி  தட்டிய   குப்பையை  தன் வண்டியில் நிரப்பிய படி  நடந்தாள்.

  ஒவ்வொரு  வீட்டு  குப்பை   கூடைகளும்  சுத்தமாக,  சுத்தமாக   இவளும், இவள்   வண்டியும்  ழுக்காகி   கொண்டிருந்தார்கள்.

      ஒரு வழியாய் ,  குப்பை வண்டியை  ஓரம் கட்டி  வீடு நோக்கி  நடந்த போது  மனது  மரத்துப்  போனது. சுந்தரம் ன்று  எந்நிலையில்  வருவானோ..,?

      சுந்தரம்  மலிவான  மதுவை  உள்ளுக்குள்  இறக்கி  
மகிழ்வாக  இருந்தான்.

           .வீட்டிலுள்ள  பொருட்கள்  வாரியிரைத்து  சுத்தமில்லாமல்  கிடந்தது.
 அதன்  நடுவே  குழந்தை  மது  விளையாடிக்  கொண்டிருந்தது.

    குழந்தையை  தூக்கிக்      இடுப்பில்  வைத்துக்   கொண்டாள். அடுப்பை  பற்ற  வைத்து  அரிசியை  ளைந்து போட்டாள்அடுப்பை போல  மனதும் எரிந்து  கொண்டிருந்தது.

          வாசலிலே  பூசணிப்பூ  வாடி  வதங்கி  கொண்டிருந்தது.  அவள்  வாழ்க்கையைப்  போல..,!!

                                                 உமா நாராயண் , (குமரி உத்ரா )


     

Wednesday, December 20, 2017

புள்ளிகளும்.., கோலங்களும்..,!!!



சாண முற்றம்..,
எனக்காக காத்திருக்க..,

நான் இளைத்த..,
புள்ளிகளும்.., கோலங்களும்..,
கம்பிக் கோலங்களாய்..,

புதிரிலிருந்து வெளிவராது.,
எதையோ எதிர்பார்க்க..,

இறைவனும் மெல்ல..,
இதழ் விரிக்க..,
என் வாழ்க்கை...,

புதிரான கம்பிக் கோலமா..,??
வண்ணமயமான..,
ரங்கோலிக் கோலமா..,??

தெரியாமலேயே..,
என் விரல்கள்..,
மீண்டும்..,மீண்டும்..,

இளைக்கிறது..,
புள்ளிகளையும்..,
கோலங்களையும்...,!!



      உமா நாராயண்,(குமரி உத்ரா)

Friday, December 15, 2017

நாளையை எதிர்பார்த்து..,!!!



பூக்கள் இன்றே..,
மலர்ந்து விட்டேன் என ..,
பூரிப்பாய் புன்னகைக்கின்றன..,!!

மொட்டுக்கள் நாளை..,
மலர வேண்டும் ,
முட்டி முட்டி இதழ்களை பிரிக்கின்றன..,!!

இலைகள் நாளையை..,
எதிர்பார்த்து,
பச்சையாய் படபடக்கின்றன..,!!

தளிர்கள் நாளை..,
நாம்தான் என
தாகத்தோடு அரும்புகின்றன..,!!

மகரந்தங்கள் வண்டினங்களையும்..,
வண்ணத்து பூச்சியையும்,
வம்புக்கு  இழுக்கின்றன..,!!

கிளைகள் நாற்த்திசையும்..,
எனக்குத்தான்.,
காற்றோடு கலகலக்கின்றன..,!!

இவையேதும் அறியாமல்..,
இன்றே வீழ்ந்தாலும்..,
அது உன்னோடுதான் ..,!!

வேர்கள் நிலத்தின்..,
கைப்பிடித்து
நிம்மதியாய் உறங்குகின்றன..,!!!

                 உமா நாராயண், (குமரி உத்ரா)     

Friday, October 20, 2017

வழிப்போக்கன்..,கவிதை..,!!



யார் வீட்டுத் தலைமகனோ..,??
இல்லை இளையவனோ..,

செல்லும் வழி தோறும்..,
சில நேரம் அவன் முன்னே..,
பல நேரம் அவன் பின்னே..,

பார்வையில் எந்த..,சலனமில்லை..,
அவன் மனமோ..,
வெள்ளைப்பலகை..,!!

இருபத்திரண்டு வயது.,குழந்தை..,!!
யாருக்கும்..,
எந்த இடறுமில்லை..,
சங்கிலிகள் அவனை..,
பிணைக்கவில்லை..,!!

மனதில்எந்த..,
கள்ளமுமில்லை..,
அவன் கண்களில் ஒரு..,
ஒளியின் தொல்லை..,!!

இளைய பட்டாளங்கள்..,
இணைய உலகில் ஏதோ,தேடிய போது..,
உற்சாகமாய் சாலை ஓரம்.., 
துள்ளும் மானாய் அவன்..,!!

வாட்ஸ் அப்பில் விரல் நனைக்கும் போது..,
நட்சத்திரங்களோடு.., 
பேசும் அரிஸ்டாட்டிலாய் அவன்..,!!

காலை போய் மாலை.., 
வீடு திரும்பும் காளை அவன்..,!!
எங்கே பயணம்.,எங்கே முடிவு.,?
இலக்கில்லாத.., பறவை அவன்..,!!

நமக்கு அவன் ஒரு..,
வழிப்போக்கன்..,!!

யாருடைய இதயத்திலிருந்தோ..,
கசியும் ரத்தத்துக்கு..,
சொந்தக்காரன்..,!!

இறைவன் வரைந்த கோலமிது..,
புள்ளியில் தொடங்கி..,
புதிராய் முடியுது..,!!

சில,நேரம் கிறுக்கல்கள் கூட..,
ஓவியமாகுது..,நம்மைப் 
படைத்தவன் மனது வைத்தால்..,!!

           உமா நாராயண், (குமரி உத்ரா)

Monday, August 21, 2017

“தளிர்”...!!! சிறுகதை..,!!

    



கோடாரியை கீழே போட்டு நெற்றி வியர்வையை வழித்து விட்டான் வாசன். வெட்டிப்போட்ட மரங்களை இரண்டாக வகுந்து கொண்டிருந்தார்கள். தொழிலாளர்கள்.,

மாணிக்கம் லாரியில்,எல்லாத்தையும் ஏற்றி அனுப்பிடணும். வேலையாட்களிடம் மரங்களை அடுக்கி, தார்ப்பாழ் கொண்டு மூட சொன்னான்.,
அதிகாலையிலிருந்து, மதியத்திற்குள் ஒன்பது மரங்களை.., சாய்த்திருந்தான்.
     முதலாளி கிட்டே, அடுத்தமாத சம்பளத்தையும் சேர்த்து கேட்கணும். வசுந்தராவுக்கு எப்போ பிரசவ வலி..., வரப்போகுதோ தெரியல..,மருத்துவ செலவுக்கு உதவும்..!!மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

வசுந்தரா மேடான வயிற்றை தூக்கியபடி நடந்தாள். குழந்தை, வந்தனாவின் டிபன்பாக்ஸில் உணவை அடைத்துக்கொண்டாள். வெளியே வந்தாள்.வெயில் வியர்வை ஊற்றை பெருக்கி விட்டது. வேகமாக நடக்கலானாள்..!

    எப்படியோ குழந்தை வந்தனாவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வரும்போதுமனம் லேசாகி போனது. நிறைமாத வயிறு மட்டும்கனத்துக் கிடந்தது. “ச்சே என்ன வெயில்.குடையாவது எடுத்து வந்திருக்கலாம்.” நாக்கும் வறண்டுபோனது. வெயிலுக்கு ஒதுங்க ஒரு இடமும் இல்லையா..,?? கண்களை மேய விட்டாள்.

   அதோ.., அங்கே ஒரு சோலை.., பூங்காவை பார்த்ததும் எட்டி நடை போட்டாள் வசுந்தரா. பூங்காவுக்குள், நுழையும்போது கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. நா, வறட்சியோடு, இடுப்பு வலியும் சேர்ந்து , ஆ.., அம்மா அலறியபடி மயங்கி சரிய.., பூங்காவில் நின்றவர்கள் ஓடி வந்தனா். அவளை நோக்கி..,

 கைப்பேசி அழைக்க.., எடுத்த வாசன் அதிர்ந்தான்.

அவசரமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவனிடம்.. அங்கே நின்றிருந்த பெண்கள் சொன்னார்கள். “அந்த பொண்ணு பூங்கா வாசலிலே மயக்கம் போட்டு விழுந்திடிச்சி. இங்கே மட்டும் வராம.., ரோடு பக்கத்திலே விழுந்திருந்தா, அடிக்கிற வெயிலுக்கு என்னவோ ஆகியிருப்பா..,!

எந்த புண்ணியவான் நட்ட மரங்களோ..,அந்த வெயிலிலேயும்.., காற்றையும், குளிர்ச்சியையும் தந்திட்டு இருக்கு. வெயிலோட அருமை நிழலிலே தெரியும்பாங்க. அவங்களை.., ஆசுவாசப்படுத்தி உங்க நம்பரை கேட்டு உங்ககிட்டே தகவல் சொன்னோம்.
உடனே.., ஆம்புலன்ஸ் வரவழைத்து, இங்கே சேர்த்தோம். இன்னும் பத்து நிமிசத்திலே குழந்தை பிறந்திடும்.  டாக்டர் சொன்னாங்க..,என்ற பெண்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டான் வாசன்.

“அந்த பொண்ணோட வந்தவங்க யாருங்க’..,?“ஆண் குழந்தை.., பிறந்திருக்கு.” உள்ளே இருந்து குரல் வர..,  பாய்ந்து உள்ளே ஓடினான்.
கையில் தந்த.., குழந்தையை வாங்கும்போது.., கைகள் நடுங்கியது. மரங்கள், வெட்டி,வெட்டி.., காய்ப்பேறிய கைகளைப் பார்த்தான்..!
குழந்தைக்கு உறுத்தக்கூடாதே.., தன் தலையில் கட்டியிருந்த, துண்டை எடுத்து குழந்தையை வாங்கினான்.!!

சில நாட்கள் கழித்து.., வசுந்தராவோடும்,குழந்தையோடும்  தன் வீடு நோக்கி பயணிக்கையில் பூங்காவை பார்த்தான்.

   பாலையிலும்.., சோலையாய்.., அந்த பூஞ்சோலை சிரித்தது.  அந்த சாலையில், நடந்தவர்கள் ஓய்வெடுக்க., குழந்தைகள் விளையாட..,சிறு குழந்தைகள் நடைபயில.., உற்சாகமாய் உடற்பயிற்சி செய்ய.., ஒரு உலகமே இயங்கி கொண்டிருந்தது.

எத்தனை மரங்களை முறித்திருப்பேன். முடமாக்கி இருப்பேன். இந்த மர நிழல் தான் நேற்று என் வசுந்தராவை காப்பாற்றி இருக்கிறது.இனி என் வாழ்க்கை முழுக்க, நான் செய்த தவறுக்கு..,பரிகாரமாக  புது மரங்களை நடவு செய்து..,  இந்த ஊரையே பூங்காவாக்க போகிறேன்..,!!

தீர்மானமாய் முடிவெடுத்தவன்.., தன் கையில் சிரித்த தன் தளிரைப் பார்த்து முறுவலித்தான்.!!

           உமா நாராயண், (குமரி உத்ரா)                        


சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...