Monday, March 6, 2017

பெண் என்னும் தீபங்கள்...,!!


பெண் என்னும் தீபம் ..,
அவளிருந்தால் அது ஆலயம்..,!!

பெண் பிறந்தது ஒரு இடமானாலும்..,
பயன் தருவது இன்னொரு இடம்..,
அழகு பூக்களை போல..,!!

விதைகளாய் விழுபவள்..,
பூக்களாய், கனிகளாய்,வாசமாய் ..,
விருட்சமாய் விஸ்வரூபம் எடுப்பவள்..,!!

குழந்தையாய், குமரியாய் சகோதரியாய் ..,
தாயாய் ,தாரமாய்..,
ஆண்களின் சுவாசங்களில் கலந்தவள்..,!!

சக்தியின் பிறப்பிடம் அவள்..,
பாரதி கண்ட புதுமை அவள்..,

மானுடத்தை படைத்த இறைவி அவள்..,
சாகித்தியத்தை புரட்டும் சரித்திரம் அவள்..,!!

இல்லறம் என்ற நந்தவனத்தேரை..,
சாரதியாய் ஓட்டி வருபவள்..,!!

ஒளி விளக்காய், பிரகாசம் தந்து..,
குடும்பத்தை அரவணைத்து செல்லும்..,
பெண் என்னும் தீபம்..,  அவள்..,!!


                               உமா நாராயண்,(குமரி உத்ரா)

6 comments:

  1. ஒரு ஆண்,பெண்ணின் சுவாசம் இல்லாமல் (தாய்,சகோதரி,தாரம்) வாழ இயலாது என்பதை கூறியது அருமை....

    ReplyDelete
  2. ஒரு ஆண்,பெண்ணின் சுவாசம் இல்லாமல் (தாய்,சகோதரி,தாரம்) வாழ இயலாது என்பதை கூறியது அருமை....

    ReplyDelete
  3. நன்றி ..தங்களுக்கு ..

    ReplyDelete
  4. அருமையான படைப்பு...

    ReplyDelete

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...