Tuesday, January 17, 2017

மனம் ...,!! சிறுகதை..!!!

  அனிஷ் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

                 அவள் கண்ணீரைத் துடைத்து.., அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது. குற்ற உணர்வில் மனம் படபடத்தது.!!

                அவளையே பார்த்துக் கொண்டிருந்த அனிஷ் அவள் தன்னை  பார்ப்பது தெரிந்ததும் முகத்தை தாழ்த்திக் கொண்டான்.
.
         அவள் கோபமாக திரும்பி முறைத்து விட்டு தன் பஞ்சு பாதங்களை வைத்தால் தரைக்கு வலிக்குமோ...? என்பது போல மிக மெதுவாக நடந்துப் போனாள்.!!.  
                அனித்ராவின் கோப முகம் அவனுள் சங்கடத்தை ஏற்படுத்தியது.  தான் அவளை அடித்திருக்க கூடாதோ…?

             யோசித்தவன் அவளிடம் சாரி சொல்ல வேண்டும் போலிருக்க மனம் படபடக்க அம்மா பார்க்கிறாளா...?  என கிச்சனுக்குள், ஒரு பார்வைப் பார்த்து விட்டு அவளைப் பின் தொடந்தான்.

             அவளை வழிமறித்து முன்பு போய்   நின்றவனை, அவள் திடுக்கிடலோடு பயமாய் பார்த்தாள் .அவள் மனம் திக்,திக் என அடித்துக் கொண்டது..!!
     அவன், அவளை நெருங்கி..,நெருங்கி  மெல்ல அணைத்துக் கண்களில் வழிந்த நீரைத்  துடைத்து விட்டு, அவள் நெற்றியில்.., மெல்ல.., மெல்ல இதழ் பதித்தான்.!!

       “”சாரிம்மா ..அனித்ரா, என்னோட கரடி பொம்மையை நீ தான் எடுத்துருப்பேன்னு தவறா அடிச்சிட்டேன். அம்மாகிட்ட சொல்லிடாதேம்மா!”

        அவன் அழும் குரலில் சொல்ல, அவள் சொல்ல மாட்டேன் என தலையசைத்தாள்.

                மறுபடி ஒரு முத்தம் பதித்து..,”” நாம விளையாடலாமா”” கேட்டபடி, மனதில் எழுந்த சந்தோச துள்ளலோடு.., ஆசைத்தங்கை அனித்ராவை கைப்பிடித்து அழைத்து சென்றான் நான்கு வயது அனிஷ்.!!

       அங்கே ஒரு பாசப் போராட்டம் மறுபடி..., களை கட்ட ஆரம்பித்திருந்தது..,!!!   


               உமா நாராயண். (குமரி உத்ரா)

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...