Friday, January 6, 2017

புத்தாண்டே வருக..!!!

பூத்தது புத்தாண்டு..,
புத்தாண்டே வருக.., பூரிப்பாய் வருக..!!

வசந்தம் வேண்டுமென  வரவேற்கிறோம்...,!!!
உன் பொற்கரம் கொண்டு முகம் மறைக்காதே..,!!

நாணி விட்ட நாணல்களும்.,தலை சாய்க்கும் நெற்கதிரும்..,
காணவில்லை என்ற தாபமா.,??

படர்ந்து சிரித்த அல்லியும், வெண்(செந்)தாமரையும்.,
வாகாய் படர்ந்திருந்த ஊதாக்கொடியும்.,உதிர்ந்து போன அவலமா.,?

வேய்ந்த பனையோலையிலும் .,தென்னங்கீற்றிலும்
சாண முற்றத்தில் மேய்ந்த மழலைகளும்.,இடமின்றி ஓடிய கதையுமா.,?

பல பச்சை தருக்களும்., இச்சை மனிதருக்காய்.,
உயிர் விட்ட ஓலமா .,??

என்ன இது.,? ஒரு வருடம்.,ஒளிந்திருந்து
வருவதற்குள்.,ஓடாகி போனது எம் நாடு., என்ற கழிவிரக்கமா .,??

பதினேழாம் ஆண்டிலாவது.,பட்டாம்பூச்சியும் தட்டானும்
வர்ண கலவை பூசி., வானெல்லாம் பறக்கட்டும்.,!!

எந்நாடு சுற்றினாலும்., எம் சொந்தங்கள்.,
வேய்ந்த கூரையின் கீழ் ஓடி விளையாடட்டும்.,!!

ஆலும்., வேலும்.,பச்சை தருக்களும்,ஆகாயம் வரை.,
வான் முட்ட வளரட்டும்.!!

அகல வாய் திறந்த குளங்களிலும், ஆறுகளிலும்.,
கயல் விழி மீன்கள் கட்டியம் பாடட்டும்.,!!

அல்லியும்., தாமரையும்.,ஆதவனிடமும், 
நிலவிடமும் ரகசியம் பேசட்டும்.,!!

நாணிய நாணலும்., கர்ப்பத்தில் கதிர்களை சுமந்த.,
நெற்கதிர்களும், பசுமையாய் பாய் விரிக்கட்டும்.,!!

வர்ணம் இழைத்த புது கனவுகளை.,
புதிராய் ஒளித்து வைத்திருக்கும்.,

பொக்கிஷ புத்தாண்டே.,வருக, வருக..,!!
பொங்கிய எம் மனங்களை .., இளநீராய் தணிக்க..,!!! 

                                         உமா நாராயண் (குமரி உத்ரா)

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...