Friday, January 6, 2017

தை மகளே வருக...,!!!

                     
தை மகளே.., தையலே., 
உன் பாதம் 
எடுத்து வருகவே...,!!




பழையன கழித்து.,
புதியன புகுத்தி..
,
இல்லங்களை, வர்ணங்களில் 
வசியப்படுத்தி..!!
,
அகமும் புறமும்
சுத்தப்படுத்தி..
,
ஆனந்தமாய் 
வரவேற்போம் போகி..,!!

சாணத்தில் இளைத்த முற்றம்,
மாக்கோல வசீகரம்.,

சிரிக்கும் பச்சையரிசி., 
மனம் இனிக்கும் கரும்பு..,!!

வர்ணங்களில் மெருகே(ற்)றிய
பானைகள்.,

பக்கத்தில் மஞ்சள் நாற்று., 
மணக்கும் கொன்றை பூ.,!!

பாகாய் வெல்லம்.,
தேங்காய் பூ தூவி.

பதமாய் தலைநிமிர., 
ஆதவனும் கண் சிமிட்ட..,

புத்தாடைகளிலும்.,
குலவைகளிலும்
கர்வமாய் எம் மக்கள்..,!!

ஏரும்,கலப்பைகளும், 
எங்கள் தாத்தனும்..,

தலைசிலுப்பும்
காங்கேயங் காளைகளும்.!!
,
கழுத்தில் வெண்கல மணியும்.,
சிரிக்கும் செவ்வரளியும்.,

கொம்புகளில் தீட்டிய., 
அழகு வர்ணங்களும்..,

நனவென்று நாள் சொல்லுதடி..,
கனவொன்று கை கூடுதடி..!!

வசந்தமும்.,
வாசல் வந்ததடி ..,!

தையலே.., தை மகளே..  
உன்னழகு நடை பயின்றடி..,!!
                                          
                                
                               உமா நாராயண் .(குமரி உத்ரா)

                                                      



1 comment:

  1. தை தை என தை அழகாய் வந்திருக்க
    விதை விதை என விதைக்க தமிழ்தாய் தந்திருக்க
    கவி தை கவிதை தந்திருக்கிறார்

    -நெல்லை ஆடலரசன்@Natarajan

    ReplyDelete

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...