Friday, December 16, 2016

பாரதியார் _கவிதை





கலைவாணி கண்டெடுத்த..,  இந்த கவி வீணை..,
காவியம் படைக்கும்..,கவிக் குழந்தையானதே..,!!

பாரதி எனும் நாமத்தில்..,பேனா முனைகள்,
வார்த்தை புயலை கூர்தீட்டி..,தீர்க்க தரிசனம் பெற்றதே..!!

முறுக்கு மீசையும்..,நறுக்குக்  கவிதைகளும்..,
முண்டாசு கவிஞரிடம்..,மண்டியிட்டதே..,!!

பாட்டு கவிஞரின்..,மெட்டு வரிகளுக்குள்..,
மொழிச் சிறகை..,முடக்கி கொண்டதே..!!
,
தமிழ் வார்த்தை தேரை..,வடம் பிடித்து இழுத்து..,
கவிப்பேழையை சுமந்து..,தரணிக்கு தந்ததே..,!!


ஓய்ந்து மறந்த..,குழந்தைகளிடம்..,
ஓடி விளையாடச்சொல்லி..,உற்சாகம் தந்ததே..,!!

காக்கை சிறகிலும்..,சின்னஞ்சிறு கிளியிலும்..,
இன்னும் பல கவியிலும்..,மனம் இறகாய் பறந்து போனதே.,!!

பாட்டுக்கு ஒரு பாரதி..,கவித்தேருக்கோ நீ சாரதி..,!
எட்டயபுரம் தந்த..,எட்டாத உயரம்...நீ.., இந்த புவி பாரதி..,
என கர்வமாய் முழக்கமிட்டதே..,!!

அக்னி குஞ்சு ஒன்று..
கண்டேன்.., என தமிழன்னையும்..,
பெருமிதம் கொண்டாளே..,!!

அந்த அக்னிகுஞ்சு..,
எங்களின் கவி பொன்குஞ்சு..,
என எங்கள் நாவும் கட்டியம் சொன்னதே.,!!

காலமும், வென்ற பாரதியின்..,
வரலாறு சொன்னதே ..,!!

                                   உமா நாராயண்,(குமரி உத்ரா) 

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...