Saturday, December 24, 2016

தண்ணீர்..., சிறுகதை..!!!

         
                                               
                                         

    ராமசாமி...,ராமசாமி .., மாத்தூர் டேமில..,தண்ணீர் திறந்து விடுறாங்களாம்.” ஆத்துல..,  தண்ணீர் வரப்போகுது. பயிர்களெல்லாம் வாடிப்போய் கிடக்குது.  தண்ணியை..,நம்ம வயல்களுக்கு திருப்பி விடலாம். சீக்கிரம் வா...!!”“மேலத்தெரு  மாடசாமி சொல்ல.., ராமசாமி துள்ளி குதித்து எழுந்தான்.!!

    மனைவி மல்லிகா எடுத்து வைத்த.., கஞ்சியையும்.., ஆவக்காய் ஊறுகாயையும்.,அவசரமாக வயிற்றுக்கு வார்த்தான். மண் வெட்டியை தோளில் சாய்த்து.., மாடசாமியுடன் வயலுக்கு விரைந்தான் ராமசாமி.!!

   ஆற்றில் வெள்ளம் அலை புரண்டோடி  வந்தது. நுரை பொங்கும் தண்ணீரில்,சோர்ந்து கிடந்த நெத்திலி மீன்களும்..,கெண்டை மீன்களும் வெள்ளி உருகலாய் குதித்தாடின. பறவைகள் தாழ்வாக பறந்து தண்ணீர் பரப்புகளில் இறங்க ஆரம்பித்தன. மீன் கொத்திகளும்..,கொக்குகளும்., தாவி விழுந்த மீன்களை லாவகமாக கொத்தின..!!

      குழந்தைகள் கும்மாளமாக தண்ணீரில் குதித்தார்கள். சில குழந்தைகள் மண் புழுக்களை.., தூண்டிலில் வைத்து, மீன் பிடிக்க தயாரானார்கள். மரங்களின் வேர் பகுதியில் தண்ணீர் தழுவ..,குளுமையில் சிலிர்த்தன மரங்கள். தண்ணீர் கிளை வாய்க்கால்களில்., பாய்ந்து ஓடியது.!!

      வயலின் வரப்புகளை வெட்டி.., தன் வயல்களுக்கு தண்ணீர் பாய விட்டான் ராமசாமிபயிர்கள் சின்ன சிணுங்கலோடு..,அசைந்து ஆடியது. ராமசாமியின் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இன்னும் இரு மாதங்களில் கதிர்கள் வந்து விடும்.பின் மாடுகள் வைத்து, நெல்மணிகளை களைந்து.., பத்தாயத்தில் தட்டி போடணும்இனி வயிற்றுக்கு பஞ்சம் இல்லை. கொஞ்சம் நெல்மணிகளை விதை நெல்லுக்கும்., இரண்டு மரைக்கால் நெல் மாடசாமிக்கும் கொடுக்கவேண்டும். சந்தோஷத்தில் ஆடும் பயிர்களை பார்த்து சிரிக்க தொடங்கினான்.!!

“ என்னங்க..,. சீக்கிரம் எழும்புங்க..,,மல்லிகா தான் அவனை,எழுப்பி கொண்டிருந்தாள். சிமென்ட்பேக்டரியில.., ஜல்லி வந்து இறங்கி இருக்காம்.!! சீக்கிரம் போங்க”.., மல்லிகாவின் கத்தலில் முழித்து பார்த்தான் ராமசாமி..  பாயில் இருந்து விழித்தான். “சீக்கிரம் பேக்டரிக்கு  போங்க.! “என்றவள் பல் தேய்த்து வந்தவனிடம் அந்த, தண்ணீர் பாட்டிலையும், கஞ்சி வாளியையும் நீட்டினாள். தண்ணீர் குடிக்காம நிக்காதீங்க.” இப்போ என்னன்ன நோய்களோ வருது.. என்றாள்.!!

தண்ணீர் பாட்டிலை வாங்கியவன்.., அதை உற்று நோக்கினான். தண்ணீர் தடுமாற்றமாய் உள்ளே அலம்பியது.!! பாட்டிலை தோள் பையில்
வைத்தவன் பேக்டரியை.., நோக்கி...,பொடி  நடையாய்  நடக்க...,ஆரம்பித்தான் மாடசாமியோடு...!!  



                                   உமா நாராயண்,(குமரி உத்ரா)
                                         

11 comments:

  1. சூப்பர். வாழ்த்துக்கள்

    ஆடலரசன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் உமா..,

    பிரியா கதிர்வேல்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் உமா..

    ஜியா

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் உமா

    ஹேமா.ஷார்ஜா

    ReplyDelete
  5. congrats uma..

    அஞ்சுகம்

    ReplyDelete
  6. நம்மில் ஒரு சிறுகதை எழுத்தாளரும் உண்டு என்பதில் மிக சந்தோசம்..,

    ரமா

    ReplyDelete
  7. very nice uma ..,congrats..

    swetha..burdubai

    ReplyDelete
  8. அருமையான,மனதைத் தொடும்,நிதா்சனமான உண்மையை உணர்த்தும் கதை.உண்மை பொட்டில் அறைகிறது..

    ஜியாவுதின்.

    ReplyDelete
  9. அருமை உமா. விதை நெல் ஒரு விவசாயிக்கு உயிரை விட மேலானது. வெகு நாளுக்கு பிறகு அந்த வார்த்தை படித்த போது,ஏனோ ஒரு வலி அருமை.

    பிரியா கதிர்வேல்.

    ReplyDelete

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...