Friday, December 16, 2016

மரங்கள்..,எங்கே...??


       

                                     


மரம் தான்..,! மரம் தான்..,!
எங்கும் மரங்கள் தான் சில காலம்..,!!

நற் காலை  என்றாலே., காகம் கரையும்.,
குயிலோசை கேட்கும்..,
மரங்களின் மறைவில்.,!!

குஞ்சுகள் குறை சொல்லும்.,
தாய் பறவை தத்தி வந்து உணவூட்டும் .,
இலைகளின் மறைவில்..,!!

கனிகள் சுவையூட்டும்..,
காய்கள் பசியாற்றும்.,
சமையல் அறையில்.,!!

மருந்துகள் குணமாக்கும்.,
களிம்புகள் காயமாற்றும்.,
மரங்களின் தோல் ஆடையில்.,!!

பூக்கள் சிரிக்கும் ..,
புதிய நறுமணங்கள் தரும்.,
வாசனை திரவியங்களாய்.,!!

வெயிலுக்கு நிழல் தரும்.,
வேர்வைக்கு விசிறி தரும் .,
காற்றின் தயவாய் .,!!

இருக்க நாற்காலி தரும்.,
படுக்க பட்டு கட்டில் தரும்.,
உனக்கு இசைவாய்.,!!

காகிதம் தந்து.,
எழுத்தை பதியம் செய்யும்.,
நிறைவாய்.,!!

மானிடா..,
என்ன தந்தும்..,
நிழல் தருக்கள்., நிமிர்ந்து நிற்க.,
குனிந்த  மனங்கள்.,
நாம் விட்டோமா.,??  
                                                                  உமா நாராயண்(குமரி உத்ரா)       

5 comments:

  1. அருமையான வரிகள். உணர்வற்ற ஜடங்கள் அறியாத உரக்க சொல்லுங்கள்

    ReplyDelete
  2. குனிந்த மரமண்டையில்
    குட்டு உங்கள் பாட்டு...

    ஆம்
    அரம் கொண்டு மரம் அறுத்தோம்
    மரம் கொன்று வரம் தவிர்த்தோம்
    இனி
    உரம் தந்து மரம் விதைப்போம்
    கரம் சேர்த்து மரம் காப்போம் ...

    நெல்லை ஆடலரசன்@Natarajan

    ReplyDelete
  3. நன்றி.. மரங்களின் மகத்துவம் புரிந்தால் சரிதான் மக்களுக்கு..!!

    ReplyDelete
  4. அருமை....👏👏👏 மிகவும் அழகாக ஆழமாக சொல்லி இருக்கிறீர்கள் 👌

    ReplyDelete

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...