Sunday, December 25, 2016

பூக்களின் மனதோடு எழுதும் ஒரு மடல்...!!

துளசியின் மனதோடு..,
மல்லிகையின் மணத்தோடு..,

முல்லையின் சிரிப்போடு
இருவாட்சியின் நிறத்தோடு..,

பவள மல்லியின் உருவத்தோடு..,
பட்டு ரோஜாவின் அழகோடு..,

தாமரை முகத்தோடு..,
அல்லியின் கண்களோடு..,

ஆம்பலின் குவிந்த இதழோடு..,
மாதுளையின் வெட்கத்தோடு..,

ஊதாவின் உயிர்ப்பான பேச்சோடு..,
பன்னீர்  பூக்களின் விரல்களோடு..,

என்னை கட்டிப்பிடித்து..,
காதலோடு சொன்னாள் அவள்..,

அப்பா என்று.., !!  நான்..,
திணறித்தான் போனேன்..,
என் பொன் மகளின் முகம் பார்த்து.!!!.

இப்போது..,,
மணமுடித்து போன.., என் மகளின்..,
மன வரிகளின் மகிழம் பூ  கடிதம்..,,

என் முகவரி தேடி வருமா..,??
என எதிர்பார்க்கும்..,
ஒரு  செண்பகப்பூவின்  தந்தை..,!!!
   
                                                                      உமா நாராயண்,(குமரி உத்ரா)  


   

4 comments:

  1. கவிதை மணக்கிறது பூக்களால்..,பல மலர்களை நுகர்ந்த அனுபவம் கிடைத்தது..!!
    ரமா

    ReplyDelete
  2. என் அப்பாவை நியாபகப்படுத்தியது...

    அபிநயா..

    ReplyDelete
  3. பூவுலகில் மணமுடித்து.., இன்பமாய் பாவுலகில் மணம் பரப்பி, கதம்பமாய், பாசமாய் மனம் துடிக்குது தந்தையாய் ..,ஆடலரசன் துபாய்.

    ReplyDelete

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...